கோவையில் 3 பேருக்கு கரோனா பாதிப்பு
கோவை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 49 வயது ஆண் உள்பட 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 49 வயது ஆண் உள்பட 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை, போத்தனூரை சேர்ந்த 49 வயது ஆண் கோவை அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவில் சிகிச்சைக்கு திங்கள்கிழமை சேர்ந்துள்ளார். இங்கு இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தவிர கோவை கணுவாயை சேர்ந்த கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட இளைஞருடன் நேரடி தொடர்புடைய 36 வயது பெண், சென்னையில் இருந்து விமானம் மூலம் திங்கள்கிழமை கோவை வந்த 27 வயது ஆண் ஆகிய 2 பேருக்கும் செவ்வாய்க்கிழமை கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...