எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்தை நெருங்குகிறது கரோனா பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 91 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

News image
திருவள்ளூரில் 3 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு
Updated On :24 ஜூன் 2020, 6:41 am

DIN

சென்னையின் அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி மேலும் 91 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை ஒட்டியுள்ள மண்டலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ஆவடியில் 19, சோழவரத்தில்14 உள்ளிட்ட இடங்களில் தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று வரை கரோனா பாதிப்பு 2,819 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 91 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளதையடுத்து. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 2,917 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.