மதுரையில் கரோனா பாதிப்பு 1,225ஐ எட்டியது: ஒரே நாளில் 152 பேருக்குத் தொற்று உறுதி
மதுரை மாவட்டத்தில் மேலும் 152 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மதுரை மாவட்டத்தில் மேலும் 152 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகக் கரோனா தீநுண்மி தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமுடக்கம் தளர்வு செய்யப்பட்ட நிலையில், கரோனா தொற்று பரவல் வேகமெடுத்தது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.
இதன் காரணமாக புதன்கிழமை(ஜூன் 24) முதல் 7 நாள்களுக்கு முழுமையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 152 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 1,225-ஐ எட்டியுள்ளது.
மேலும், ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 6 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...