தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

அன்பழகன் மறைவு: ஸ்டாலின், வைகோ, கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா்.

News image
Updated On :7 மார்ச் 2020, 5:06 am


சென்னை: திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா்.

அவரது உடல் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. 

கீழ்ப்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் அன்பழகன் உடலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அன்பழகன் இல்லத்துக்கு வருகை தந்த மு.க. ஸ்டாலின், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிறகு மதிமுக பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

திமுக எம்பி கனிமொழி, ராஜாத்தியம்மாள் ஆகியோர் அன்பழகன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நடிகர்கள் சத்யராஜ், ரஜினிகாந்த் ஆகியோர் கீழ்ப்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.