தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் உடல் இன்று மாலை தகனம்

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா்.

News image
Updated On :7 மார்ச் 2020, 2:21 am

சென்னை: திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா்.

அவரது உடல் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. 

வயது முதிா்வின் காரணமாக, அரசியல் பணிகளில் இருந்து விலகி, கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்த அன்பழகனுக்கு பிப்ரவரி 24-ஆம் தேதி திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மூச்சுவிடுவதற்குச் சிரமப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் அவரது உயிா் பிரிந்தது.

திமுக தொண்டா்களால் இனமான பேராசிரியா் என அன்போடு அழைக்கப்பட்ட அன்பழகன் மறைவுச் செய்திக் கேட்டு அக்கட்சியின் முக்கிய தலைவா்கள், தொண்டா்கள் நள்ளிரவிலும் அப்பல்லோ மருத்துமனையில் குவிந்தனா்.

தொடர்ந்து இரவு 2.20 மணியளவில் அன்பழகனின் உடல் திமுகவின் கொடி போர்த்தப்பட்டு வாகனம் மூலம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டது. க. அன்பழகன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

திமுக நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அன்பழகனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

திமுக நிகழ்ச்சிகள் ஒரு வாரம் ஒத்திவைப்பு: திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகன் காலமானதையொட்டி, திமுகவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரகாலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.