டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரோனா: ஈரோட்டில் விழிப்புணர்வு பிரசாரம்

கரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஈரோடு மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் இன்று பொது மக்கள் பேருந்து பயணிகளுக்கு

News image
Updated On :20 மார்ச் 2020, 7:50 am

DIN

ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என்ற போதிலும் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நபா்கள் மூலம் கரோனா பரவ வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக - கா்நாடக மாநில எல்லையான சத்தியமங்கலம், தாளவாடி, பா்கூா் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு முழுமையான சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதவிர பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஈரோடு, கோபி அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து வசதிகள் கொண்ட தனிப்பிரிவு தொடங்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் வசதிக்காக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது.

Story image

இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஈரோடு மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் இன்று பொது மக்கள் பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் கிருமி நாசினி தூய்மை பணியாளர்களை கொண்டு பேருந்துகளுக்கு தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாநகராட்சி ஒப்பந்ததார் அ.செல்வராஜ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

அதேசமயம் ஈரோடு ரயில் நிலையத்தில் வரும் பயணிகளிடம் கரோனா வைரஸ் உள்ளதா என மருத்துவர்கள் கண்டறிந்த பின்பு அவர்களை ரயிலுக்கு அனுப்புகின்றனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.