கோவையில் மீண்டும் இன்று முதல் மீன் மார்க்கெட்
கோவையில் கடந்த 45 நாள்களாக மூடப்பட்டு இருந்த மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை மீன் மார்க்கெட் சில விதிமுறைகளை பின்பற்றி இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


கோவையில் கடந்த 45 நாள்களாக மூடப்பட்டு இருந்த மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை மீன் மார்க்கெட் சில விதிமுறைகளைப் பின்பற்றி இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு கடுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்பொழுது 144 தடை உத்தரவு நடைமுறையில் இருந்தாலும் அரசு சில தளர்வுகளை அறித்துள்ளது. சிறு, குறு தொழில்கள் குறைந்த வேலையாட்களை பயன்படுத்தி தங்கள் தொழில்களை தொடர அனுமதி அளித்துள்ளது.
இதன் ஒருபகுதியாக கோவை மொத்தம், மற்றும் சில்லறை விற்பனைக் கூடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததால் இன்று மீன் விற்பனை தொடங்கியது. இதனால் வியாபாரிகளும், சார்ந்த தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மீன் மார்க்கெட் சங்கத்தின் பொருளாளர் சிராஜ் கூறும்போது, 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடந்த 45 நாள்களாக மீன் மார்க்கெட் திறக்கவில்லை, தற்பொழுது அரசு குறிப்பிட்ட சில வழிமுறைகளைப் பின்பற்றிக் கடைகளைத் திறந்திருக்கிறோம்.
இதன்படி தினமும் இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் தனிமனித இடைவெளியுடன் மீன் வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கின்றோம், மேலும் தற்சமயம், தூத்துக்குடி போன்ற சில இடங்களில் இருந்து மட்டுமே மீன் வரத்து துவங்கியுள்ளது. அதனால் சற்று மீன் விலை அதிகமாக உள்ளது. மீன்வரத்து அதிகமாகும் பொழுது மீன் விலை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...