பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் சேக் (எ) ஜெயக்குமார்(25). அதே பகுதியைச் சேர்ந்த 6 நண்பர்கள் நேற்று பிற்பகல் பரமக்குடி பொன்னையாபுரம் அரசு கல்லூரி அருகேயுள்ள கண்மாய் கரையில் நின்று குடிபோதையில் பேசிக் கொண்டிருந்தனர்.
அதுசமயம் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே, ஆனந்த் ஆத்திரம் அடைந்த பொன்னையாபுரத்தைச் சேர்ந்த அழகர் மகன் ஆனந்த், ஜெயக்குமாரின் கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
தகவல் அறிந்து பரமக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் எமனேசுவரம் காவல்துறையினர் விரைந்து சென்று இறந்த ஜெயக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஜெயக்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த வாலிபர் ஆனந்த்(26 ) பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
தொடர்ந்து எமனேசுவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சரண் அடைந்த ஆனந்தை கைது செய்து, தலைமறைவான மேலும், தலைமறைவான 5 பேர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இறந்த ஜெயக்குமார் மற்றும் சரண் அடைந்த ஆனந்த் ஆகிய இருவர் மீதும் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?

'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


