

கடையநல்லூர்: பொது முடக்கம் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு தடை தொடரும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பெரியகுளம் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்த ஆட்சியர் அருண் சுந்தர்தயாளன் செய்தியாளர்களிடம் கூறியது, பொது முடக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான தடை அமலில் உள்ளது. அதுபோல் குற்றாலம் அருவியில் குளிப்பதற்கான தடை தொடரும்.
தென்காசி மாவட்டத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பில் 35 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். வட்டாட்சியர் அழகப்பராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்பொழுது தண்ணீர் கொட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.