தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை உருவாகாமல் இருக்க மக்களின் பங்களிப்பு அவசியம், கட்டுப்பாட்டுடனான தீபாவளியாக இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
"கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 3.5 சதவிகிதமாக உள்ளது.
ஐரோப்பாவில் நாள்தோறும் 2.5 லட்சம், அமெரிக்காவில் நாள்தோறும் 1 லட்சம் என வளர்ந்த நாடுகளிலேயே இன்னும் கரோனா பாதிப்பு இருந்து வருகிறது. அண்டை மாநிலமான கேரளத்தில்கூட நாள்தோறும் 5 ஆயிரத்துக்கு மேல் கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
சர்வதேச அளவிலான சிறப்பு சிகிச்சைகளை தமிழக அரசு வழங்குகிறது. இதனால், பலி எண்ணிக்கை ஒருநாளைக்கு 30 என்ற வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டு 10 மணி நேரத்தில் முடிவுகள் வருகின்றன. மற்ற இடங்களில் பரிசோதனை முடிவு வர 3 முதல் 5 நாள்கள் வரை ஆகிறது.
தமிழகத்தில் முதன்முதலாக ஒரு கரோனா பரிசோதனை ஆய்வகத்தில் தொடங்கி தற்போது 203 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. 1 கோடி பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் வளர்ச்சியடைந்துள்ளோம்.
களத்தில் 4.39 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்கள் என 10 லட்சம் பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி போன்ற பண்டிகைகளில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடுதல், அலுவலகங்களில் ஒன்று கூடுதல் உள்ளிட்டவற்றால் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. கட்டுப்பாட்டுடனான தீபாவளியாக இருக்க வேண்டும். இரண்டாவது அலை உருவாகாமல் இருக்க மக்களின் பங்களிப்பு அவசியம்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போட்டிக்குப் பிறகு... வைபவ் சூர்யவன்ஷியின் கழுத்தை நெறித்த ஆர்சிபி கேப்டன்!

மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?
ராகுலுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


