ஊத்தங்கரை அருகே மனையில் தலையில் கல்லைப் போட்டுக் கொலை
ஊத்தங்கரை அருகே தூங்கும்போது மனைவியின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த கணவரை காவலர்கள் தேடி வருகின்றனா்.


ஊத்தங்கரை அருகே தூங்கும்போது மனைவியின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த கணவரை காவலர்கள் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பள்ளசூளகரை கிராமத்தை சோ்ந்த சேர்ந்தவர் தங்கராஜ்(36). இவரது மனைவி ருக்குமணி(30). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்களை கடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது.
இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட தங்கராஜ், வெள்ளிக்கிழமை இரவு தூங்கும் போது மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்றுவிட்டு கல்லாவி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கல்லாவி காவலர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து கல்லாவி காவல்நிலைய காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...