சென்னை விமான நிலையத்தில் 1.31 கிலோ தங்கம் பறிமுதல்
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.31 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.31 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கடத்தல்காரர்களை கைது செய்தும், தங்கத்தை பறிமுதல் செய்தும் வருகிறார்கள். எனினும் தங்கம் கடத்தல் சம்பவம் தினந்தோறும் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து இன்று சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 2 பயணிகளிடம் இருந்து 512 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் துபையில் இருந்து நேற்று சென்னை வந்த விமானத்தில் 4 பயணிகளிடம் இருந்து 898 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சென்னை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த 2 நாள்களில் மட்டும் சுங்கத் துறை 1.31 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.70.7 லட்சமாகும். இந்த கடத்தல் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...