ஜோ பிடன், கமலா ஹாரிஸுக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன் அவர்களுக்கும் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் அவர்களுக்கும் வாழ்த்துகள்!
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த அமெரிக்கத் தேர்தலில் தமிழ்ப் பாரம்பரியத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைத் தங்களது துணை அதிபராக அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ், அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்த நாட்டின் 46-ஆவது அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ள இருவருக்கும் வாழ்த்துகள்!
திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தான் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்கர் அல்லாத முதல் பிற நாட்டவர் ஆவார். இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு ஆக்கப்பூர்வமான வளர்ச்சி காண அவரது வெற்றி உதவட்டும்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகே, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் 46ஆவது குடியரசுத் தலைவராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் தேர்வு பெற்று இருக்கின்றார். அவருக்கு மதிமுக சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல, இந்தத்தேர்தலில் அமெரிக்காவில் முதன்முறையாக ஒரு பெண், அதுவும் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த, தாய் வழியில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட கமலா ஹாரீஸ், அமெரிக்கக் குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பு ஏற்கின்றார் என்ற செய்தி உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. அவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...