தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சுங்கச்சாவடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இரண்டு நாள் காத்திருப்பு போராட்டத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

News image
தீபாவளி போனஸ் மற்றும் சம்பள உயர்வுக் கோரி காத்திருப்பு போராட்டம் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள் சங்கத்தினா்.
Updated On :11 நவம்பர் 2020, 11:22 am

DIN

சூலூர்: 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இரண்டு நாள் காத்திருப்பு போராட்டத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் கூட்டமைப்பு ஏஐடியுசி சார்பில் புதன்கிழமை சுங்கச்சாவடி ஊழியர்கள் 20 சதவீத போனஸ் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து காத்திருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர். 

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஏஐடியுசி மாநில துணைத்தலைவர் என். செல்வராஜ் தலைமை வகித்தார். கோவை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் பழனிசாமி சிறப்புரையாற்றினார். கணியூர் சுங்கச்சாவடி தொழிற்சங்க கிளை செயல் தலைவர் என் யுவராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கணியூர் கிளை செயலாளர் ஆர் சுரேஷ் துணைத்தலைவர் செல்லத்துரை பி முருகன் ஜி தட்சிணாமூர்த்தி சதீஷ்குமார், கிளை பொருளாளர் இலட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் மற்றும் சுங்கச்சாவடி பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

கடந்த நான்காம் தேதி மதுரை மத்திய தொழிலாளர்துறை ஆணையர் சிவராஜன் முன்பு இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

YouTube video thumbnail

அந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் கூட்டமைப்பு சார்பாக மாநில துணை பொதுச்செயலாளர் மணி கணியூர் கிளைத் தலைவர் யுவராஜ் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சுங்கச்சாவடி நிர்வாகத்தின் சார்பாக அதன் வழக்குரைஞர் இளங்கோவன், சுங்கச்சாவடி உதவி மேலாளர் கிஷோர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.  அந்தக் கூட்டத்தில் உடனடியாக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. தவறும்பட்சத்தில் நிர்வாகத்தின் மீது தொழிலாளர் துறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுமென தொழிலாளர் துணை ஆணையாளர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இந்த நடவடிக்கையில் இருந்து தப்பும் வண்ணமாக ஒரு சிலருக்கு மட்டும் சில ஆயிரங்களை போனஸ் பணமாக கொடுத்து அனைத்து தொழிலாளர்களையும் வஞ்சிக்க நினைக்கிறது நிர்வாகம். இதனை ஊழியர்கள் ஏற்க மாட்டோம். இதன் ஒரு பகுதியாகவே 11 மற்றும் 12 ஆம் தேதி என இரு நாள்கள் காத்திருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளோம்.

12 ஆம் தேதி மாலைக்குள் போனஸ் குறித்து பேச்சுவார்த்தை துவங்காவிட்டால் பணி ஒத்துழைப்பு மறுப்பு போராட்டம் துவக்கப் போவதாக அறிவித்தனர். 

இதன்மூலம் சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் பணம் வசூலிக்க போவதில்லை எனவும் அங்கு பணி நிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.  இந்தப் போராட்டத்தில் 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.