/

மக்களை மேலும் குழப்ப வேண்டாம் - பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு குறித்து ஸ்டாலின்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு என்ற அறிவிப்பு அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவத்துள்ளார். 

News image
கோப்புப் படம்.
Updated On :12 நவம்பர் 2020, 10:28 am

DIN

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு என்ற அறிவிப்பு அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவத்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது முகநூலில், “தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு; பள்ளிகள் திறப்புத் தேதி குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்!” - என்ற அறிவிப்பு இந்த அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது. எந்த முன்யோசனைகளும் இல்லாமல் அறிவிப்பதும், பின்னர் அதிலிருந்து பின்வாங்குவதும் எடப்பாடி அ.தி.மு.க. அரசின் வழக்கமாக ஆகிவிட்டது. கரோனாவை விட அரசின் அறிவிப்புகளின் மூலமாக எழும் பீதிகள் தான் அச்சம் தருவதாக உள்ளது.

குழப்பவாதிகள் கையில் அரசு இருக்கிறது என்பதற்கு பள்ளித்திறப்பு உதாரணம் ஒன்றே போதும்! குழப்ப அறிவிப்புகளின் மூலமாக மக்களை மேலும் மேலும் குழப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.