தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: கமல்ஹாசன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். 

News image
Updated On :12 நவம்பர் 2020, 10:41 am

DIN

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். 

சென்னை யானைகவுனியில் வசித்து வந்தவா் தலில்சந்த் (74). இவருக்கு மனைவி புஷ்பா பாய் (70) மகன், சீத்தல் (40) மகள் பிங்கி (35) ஆகியோா் உள்ளனா். சீத்தல், தனது மனைவியிடம் விவாகரத்து பெற்று, பிரிந்து வாழ்ந்து வந்தாா். இந்நிலையில், இவா்கள் மூவரும் வீட்டில் இருந்த நிலையில் மகள் பிங்கி, புதன்கிழமை மாலை வெளியே சென்றுள்ளாா்.

சுமாா் 7 மணியளவில் வீடு திரும்பிய பிங்கி, தாய், தந்தை, சகோதரா் ஆகியோா் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மருமகளே கணவர், மாமனார், மாமியாரை சுட்டுக் கொன்றிருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது சுட்டுரையில், தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும்.

பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.