பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நவ.18-ம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 18-ம் தேதி புதன்கிழமை தொடங்கும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

News image
நவ.18-ம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
Updated On :16 நவம்பர் 2020, 7:09 am

DIN


சென்னை: மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 18-ம் தேதி புதன்கிழமை தொடங்கும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். நவம்பர் 18-ம் தேதி சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் இன்று வெளியிட்டார்.

தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, மாநில அளவில் மற்றும் அரசுப் பள்ளியில் படித்து 7.5% ஒதுக்கீட்டு இடங்களில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் பெயர்களை அமைச்சர் வெளியிட்டார்.

இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்மூலம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் படிக்க 405 அரசு பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் சிறப்பு பிரிவினருக்கும், அடுத்த நாள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மூன்றாவது நாளில் இருந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.