எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் இன்று வெளியிட்டார்.

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் இன்று வெளியிட்டார்.

எம்பிபிஎஸ் மருத்துவ தரவரிசைப் பட்டியலில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஜன் 710 மதிப்பெண்களுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தில், நாமக்கல் மாணவி மோகனபிரபா ரவிச்சந்திரன், 705 மதிப்பெண்களுடனும், சென்னை அயனம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி சுவேதா 701 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.

விருதுநகரைச் சேர்ந்த மாணவி யாழினி 695 மதிப்பெண்களுடன் நான்காம் இடத்திலும், 691 மதிப்பெண்களுடன் தர்மபுரியைச் சேர்ந்த மாணவர் அரவிந்த் 5-ம் இடத்தையும் பிடித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் பயின்று, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, 7.5% இட ஒதுக்கீடு இடங்களில் தரவரிசைப் பட்டியலில் முதலிடங்களைப் பிடித்தவர்களின் விவரங்கள்.

தேனியைச் சேர்ந்த அரசு மாதிரிப் பள்ளி மாணவர் ஜீவித் குமார், நீட் தேர்வில் 664 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி அரசு உயர் நிலையப் பள்ளி மாணவர் அன்பரசன் 662 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்திலும், சென்னை, அரும்பக்கத்தைச் சேர்ந்த திவ்யதர்ஷினி 620  மதிப்பெண்களுடன் மூன்றாடம் இடத்திலும் உள்ளனர்.

வேலூரைச் சேர்ந்த மாணவர் குணசேகரன் நான்காம் இடத்திலும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பூபதி ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிக்கலாமே.. நவ.18-ம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவ கல்லூரிகளில் 4,981 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1,760 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியதை அடுத்து மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடவடிக்கைகள் அண்மையில் தொடங்கின.

அதன்படி,  இணையதள முகவரிகளில் மாணவா்கள் விண்ணப்பங்களை கடந்த வியாழக்கிழமை (நவ.12) வரை சமா்ப்பித்தனா். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமாா் 25,000 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,000 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பங்களைப் பரிசீலனைக்குட்படுத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் இன்று வெளியிட்டுள்ளார். அதில், 7.5% இட ஒதுக்கீட்டில் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்மூலம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் படிக்க 405 அரசு பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் சிறப்பு பிரிவினருக்கும், அடுத்த நாள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மூன்றாவது நாளில் இருந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com