பிகார் தேர்தல் பணியாற்றிவிட்டு சென்னை திரும்பிய 15 சிஐஎஸ்எப் வீரர்களுக்கு கரோனா

பிகாரில் தேர்தல் பணியாற்றிவிட்டு சென்னை திரும்பிய மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர்கள் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மத்திய தொழிற்பாதுகாப்புப் படை வீரர்கள் சில மாதங்களுக்கு முன்பு, பிகாரில் தேர்தல் பணியாற்ற அனுப்பி வைக்கப்பட்டனர். 

பிகாரில் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தல் பணியாற்றிவிட்டு 64 படை வீரர்கள் கடந்த வாரம் சென்னை திரும்பினர். அவர்களில் 42 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 15 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும், சென்னை மாநகராட்சியில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை.

அதேவேளையில், கரோனா பரிசோதனை செய்து கொண்டவர்களும், அவர்களது குடியிருப்புகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மற்றவர்கள் விடுமுறையில் சென்றுள்ளனர்.

மத்திய தொழிற் பாதுகாப்புப் படை வீரர்கள் அனைவரும் ரயில் மூலமாக சென்னை திரும்பிய நிலையில், ரயில்வே அதிகாரிகள் அவ்வப்போது அவர்களது உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com