2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

விழுப்புரத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்துக் கேட்பு

திமுக சார்பில் 2021 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நியமிக்கப்பட்டு அவர்கள் தமிழகம் முழுவதும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். 

News image
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தொடங்கிய கருத்து கேட்புக் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை வழங்கிய திமுகவினர். 
Updated On :18 நவம்பர் 2020, 9:36 am

DIN

திமுக சார்பில் 2021 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நியமிக்கப்பட்டு அவர்கள் தமிழகம் முழுவதும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். 

புதன்கிழமை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருத்து கேட்டு மனுக்களை பெறுகின்றனர்.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தொடங்கிய கருத்து கேட்புக் கூட்டத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், வியாபாரிகள் சங்கம் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை, திமுக கருத்துக் கேட்புக் குழுவிடம் நேரடியாக தெரிவித்தனர்.

இக்குழுவில் நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிகேஎஸ் இளங்கோவன், அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, துணை பொதுச் செயலாளர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டு, விசாரித்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி, வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ். மஸ்தான் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் இரா. மாசிலாமணி, சீதாபதி, கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் உதயசூரியன், கார்த்திகேயன் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கவுதமசிகாமணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லட்சுமணன், மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், ஜனகராஜ், ஏஜ்.சம்பத், அன்னியூர் சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.