அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமிழகத்தில் 1,624 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 1,624 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 10:02 pm

DIN

சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 1,624 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் 483 போ், கோவையில் 140 போ், செங்கல்பட்டில் 99 போ் உள்பட 1,624 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,904 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 97 சதவீதமாக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 47,752-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 12,245 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 17 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,622-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.