காஞ்சிபுரத்தில் 105 ஏரிகள், செங்கல்பட்டில் 179 ஏரிகள் நிரம்பின

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

அந்த வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள 105 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 179 ஏரிகளும் அதன் முழு கொள்ளவை எட்டி நிரம்பியுள்ளன.

ஏரிகள் கொள்ளளவு விபரம்
26.11.20 - பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் நிலவரம்

காஞ்சிபுரம் மாவட்டம் - 105 ஏரிகள் 100 சதவிகிதமும், 125 ஏரிகள் 75 சதவிகிதமும், 111 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம - 179 ஏரிகள் 100 சதவிகிதமும், 156 ஏரிகள் 75 சதவிகிதமும்,134 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 284 ஏரிகள் 100 சதவிகிதமும், 281 ஏரிகள் 75 சதவிகிதமும், 245 ஏரிகள் 50 சதவிகிதமும் மீதமுள்ள 110 ஏரிகள் 25 சதவிகிதத்துக்கும் குறைவாக நிரம்பியுள்ளன. இந்த மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 909 ஆகும்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com