/

புயல் நிவாரணப் பணியில் அரசு இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம்: கமல்ஹாசன்

புயல் நிவாரணப் பணியில் அரசு இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :26 நவம்பர் 2020, 4:23 pm

DIN

புயல் நிவாரணப் பணியில் அரசு இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்டவர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த கமல்ஹாசன், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என உறுதியளித்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும். வெள்ளத்தால் அரசு பாடம் கற்றுக்கொண்ட போதும் எந்த பலனும் இல்லை. சென்னையை பொறுத்தவரை முன்பைவிட சிறப்பாக அரசு செயல்பட்டுள்ளது. 

ஆனாலும் அரசின் நடவடிக்கை பாராட்டும் வகையில் இல்லை. காரணம் வெள்ளம் வருகிறது என 30 நிமிடங்களுக்கு முன்பு கூறியிருக்கிறார்கள். இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.