வங்கக் கடலில் 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை மையம்
தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவத நவம்பர் 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
நவம்பர் 30-ம் தேதி வங்கக் கடலில் காற்றுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடலோரப் பகுதியை நோக்கி வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், டிசம்பர் 1 முதல் 3-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...