மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எரதிம்மக்காள்பட்டி அருள்மிகு மாயம் பெருமாள்சாமி கோவில் கும்பாபிஷேகம் 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே எரதிம்மக்காள்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு  ஸ்ரீமான் மாயம் பெருமாள் சுவாமி, ஸ்ரீ வீருசின்னம்மாள் தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
எரதிம்மக்காள்பட்டி அருள்மிகு  ஸ்ரீமான் மாயம் பெருமாள் சுவாமி
Updated On :27 நவம்பர் 2020, 5:42 am

DIN


 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே எரதிம்மக்காள்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு  ஸ்ரீமான் மாயம் பெருமாள் சுவாமி, ஸ்ரீ வீருசின்னம்மாள் தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு இரண்டு கால யாகசாலை பூஜை நடந்தது.கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி,கோமாதா பூஜையுடன் பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. 

Story image

இதனையடுத்து பல்வேறு ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் பூஜிக்கப்பட்டு, விமான கலசத்திற்கு பூஜை செய்து குடமுழுக்கு செய்யப்பட்டது. இதனையடுத்து மூலவர்பெருமாள் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சனமும், சிறப்பு அபிசேகமும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. 

இவ்விழாவை முன்னிட்டு மக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் மக்களும், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.