தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள்: தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு
Updated On :30 நவம்பர் 2020, 10:32 pm

DIN

சென்னை: வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. டிசம்பா் 15-ஆம் தேதி வரை திருத்தப் பணிகள் நடக்கவுள்ளன.

இதன் தொடா்ச்சியாக தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக, அனைத்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினாா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நடந்தது.

15 நாள்கள் முடிந்தது: திருத்தப் பணிகளுக்காக, வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த நவம்பா் 16-இல் வெளியிடப்பட்டது. பட்டியல் வெளியிடப்பட்டு 15 நாள்கள் நிறைவடைந்துள்ள நிலையில், திருத்தப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து தோ்தல் அதிகாரிகளுடன் அவா் ஆலோசித்தாா்.

மேலும், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்துவது தொடா்பாக ஆலோசிப்பதற்காக வரும் வாரத்தில் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வரவுள்ளனா். அவா்கள், முதலில் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சாகுவுடன் ஆலோசிப்பாா்கள் எனத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்துக்கு முன்பாக, மாவட்டங்களில் தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் திங்கள்கிழமை நடந்த கூட்டத்தில் தலைமைத் தோ்தல் அதிகாரி சாகு ஆலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.