ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து, அதிமுக முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்ததற்கு, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

News image
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு
Updated On :7 அக்டோபர் 2020, 12:47 pm

DIN


சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து, அதிமுக முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்ததற்கு, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு இன்று மாலை, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வருகை தந்தார்.

தனது இல்லத்துக்கு வந்த பழனிசாமியை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் ஓ. பன்னீர்செல்வம். முதல்வர் பழனிசாமியிடம், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் ஆசி பெற்றார்.

அதிமுகவில் இன்று அமைக்கப்பட்ட வழிகாட்டு குழுவின் 11 உறுப்பினர்களும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் வாழ்த்து பெற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.