சிவகாசி அருகே ரூ. 50 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
சிவகாசி அருகே உரிமம் பெறாத கட்டிடத்தில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


சிவகாசி அருகே உரிமம் பெறாத கட்டிடத்தில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி சாத்தூர் சாலையில் அனுப்பங்குளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அனுமதி பெறாத கட்டடம் ஒன்றில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் தீப்பெட்டி பட்டாசு தனி வட்டாட்சியர் லோகநாதன் ஆகியோருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அவர்களுடன் வருவாய் துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
சோதனையில் தர்மராஜ் என்பவர், வயது 65 விஷ்ணு டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் லாரி சீட்டு நடத்தி வருவதும் லாரிகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு பட்டாசு பண்டங்களை அனுப்பி வைப்பதற்காக உருவமில்லாத கட்டிடத்தில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. ஒரு கிட்டங்கியில் பட்டாசு சேமித்து வைக்க வேண்டுமெனில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு தர்மராஜ் எவ்வித அனுமதியும் பெறாததால் அந்த கிட்டங்கியில் இருந்த சுமார் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து அந்த கிட்டங்கி சீல் வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...