கீழே கிடந்த செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த நபர்
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் வெள்ளிக்கிழமை கீழே கிடந்த செல்போனை எடுத்த நபர் அதை உரியவரிடம் ஒப்படைத்தார்.


வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் வெள்ளிக்கிழமை கீழே கிடந்த செல்போனை எடுத்த நபர் அதை உரியவரிடம் ஒப்படைத்தார்.
வெள்ளக்கோவில் கடைவீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (33). இவர் கரூர் சாலையிலுள்ள அம்மன் கோவில் வீதி வழியாகச் சென்று கொண்டிருந்த போது, சாலையில் ஒரு செல்போன் கிடந்தது. அவை நம்பர் லாக் செய்யப்பட்டிருந்தது.
இருந்தாலும் நீண்ட நேரம் முயற்சி செய்து, அந்த போனில் பதிவாகி இருந்த ஒரு எண்ணுக்கு போன் செய்து, அதன் உரிமையாளர் கச்சேரிவலசையைச் சேர்ந்த தனியார் வங்கிப் பணியாளர் வினோத் என கண்டுபிடித்து ஒப்படைத்தார்.
பிறர் பொருளுக்கு ஆசைப்படாத அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...