சென்னையில் கரோனா சிகிச்சையில் 11,425 பேர்

சென்னையில் கடந்த 3 நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 800-க்கும் குறைவானவர்களுக்கு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் 11,425 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் கரோனாவுக்கு 11,425 பேர் சிகிச்சையில்
சென்னையில் கரோனாவுக்கு 11,425 பேர் சிகிச்சையில்

சென்னை: சென்னையில் கடந்த 3 நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 800-க்கும் குறைவானவர்களுக்கு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் 11,425 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1.90 லட்சத்தை அண்மையில் எட்டியது. அக்டோபா் மாத தொடக்கத்தில் நாளொன்றுக்கு சுமாா் 1,200 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, அந்த எண்ணிக்கை குறைந்து நாளொன்றுக்கு சுமாா் 800-ஆக குறைந்துள்ளது. இதன்படி, கடந்த திங்கள்கிழமை 845 பேருக்கும், செவ்வாய்க்கிழமை 857 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

845 பேருக்கு தொற்று: புதன்கிழமை (அக். 21) 845 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து,92,527-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1 லட்சத்து 77,546 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 11,425 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,556- ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக அண்ணாநகரில் 1,003 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அண்ணாநகரிலும் கோடம்பாக்கத்திலும் அதிகபட்சமாக 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மண்டலவாரியாக கரோனா நிலவரம்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com