தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நடிகர் சூரி கொடுத்த பணமோசடி புகார்: முன்ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி மனு

நடிகர் சூரி கொடுத்த பணமோசடி புகாரில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

News image

நடிகர் சூரி

Updated On :23 அக்டோபர் 2020, 10:16 am

DIN

சென்னை: நடிகர் சூரி கொடுத்த பணமோசடி புகாரில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ள வீரதீர சூரன் என்ற திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு வழங்க வேண்டிய ரூ.40 லட்சம் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை வாங்கித் தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், விஷ்ணு விஷால் தந்தையும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா ஆகியோர் கூறியுள்ளனர்.

அந்த நிலத்துக்காக  இருவரும் தன்னிடம் இருந்து ரூ.2.70 கோடியை கூடுதலாக பெற்று மோசடி செய்து விட்டதாக போலீஸில் நடிகர் சூரி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், போலீஸார் தங்களை கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.