கரோனா தொற்று பரவல் நிலையில், மக்களுக்கு உதவும் வகையில் இன்னும் மூன்று மாதங்களுக்கு அனைத்து வகையான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி., வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும், என த.மா.கா., இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கேட்டுக் கொண்டார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. பலர், பணியை இழந்தும், ஊதியம் கிடைக்காமலும், வருவாயை இழந்துள்ளனர். பல நிறுவனங்களே பாதிக்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள், மால்கள், திரையரங்குகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக செயல்பட அனுமதி அளித்து வருகிறது. இதனால், வியாபாரம் பாதிக்கிறது.
ஊரடங்கால், மார்ச், 15 முதல் ஆக., 31 வரை அனைத்து வகையான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு ரத்து செய்திருந்தது. ஊரடங்கு தளர்வால், தற்போதுதான் மக்கள் பணிக்கு திரும்புகின்றனர்.
எனவே, இன்னும் மூன்று மாதங்களுக்கு அனைத்து வகையான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி.யில் வரி விதிப்பு வழங்க வேண்டும். இதன் மூலம், பொருட்களின் விலை குறைந்து மக்களுக்கான செலவினம் குறையும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

