/

உத்தமபாளையத்தில் நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நியாய விலைக்கடை பணியாளர்கள்.
Updated On :2 செப்டம்பர் 2020, 7:55 am

DIN


உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தமபாளையத்தில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைகளும் 100% பொருட்கள் வழங்கும் வகையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். கரோனா வைரஸ் தொற்று மருத்துவ குழு காப்பீட்டு திட்டத்தில் சேர்த்தல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உத்தமபாளையம்  கம்பம், சின்னமனூர், போடி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.