/

தங்கம் விலை தொடர்ந்து சரிவு: இன்றைய விலை நிலவரம்

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.39,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image
gold-prices continue to fal:l todays price situation
Updated On :3 செப்டம்பர் 2020, 6:04 am

DIN

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.39,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது. ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது.

இதைத்தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக விலை மீண்டும் உயா்ந்தது.

இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை 22 கிராம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.39,016-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.34 குறைந்து, ரூ.4,877 ஆக இருந்தது. 

இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக குறைந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.60 குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.1600 குறைந்து ரூ.73.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்.......................... 4,877

1 சவரன் தங்கம்...............................39,016

1 கிராம் வெள்ளி.............................73.30

1 கிலோ வெள்ளி.............................73,300

புதன்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம்............................... 4,911

1 சவரன் தங்கம்............................... 39,288

1 கிராம் வெள்ளி............................. 74.90

1 கிலோ வெள்ளி............................74,900
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.