ஈரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு கமலா நகரைச் சேர்ந்தவர் மனோகரன். இவருக்கு சங்கர் ( 30), தினேஷ் (20) என 2 மகன்கள் உள்ளனர். சங்கர், தினேஷ் இருவரும் கட்டடத் தொழிலாளர்கள். சங்கருக்கு திருமணமாகி மனைவியுடன் வண்டியூரான் கோயில் பகுதியில் வசித்து வந்தார். சங்கருக்கு குடிப் பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வந்ததால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
இருப்பினும் சங்கர் தொடர்ந்து குடித்து வந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு சங்கர் குடிபோதையில் கீழே விழுந்து அடிபட்டு காயத்துடன் வீட்டிற்கு வந்துள்ளார். இதைப்பார்த்து அவரது தந்தை மனோகரன் மற்றும் தம்பி தினேஷ் ஆகியோர் சங்கரை கண்டித்துள்ளனர்.
பின்னர் சங்கர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டார். சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்கு வந்தார். அப்போது தினேஷ் தூங்கிக் கொண்டிருந்தார். ஏற்கனவே தம்பி கண்டித்ததால் ஆத்திரத்தில் இருந்த சங்கர் வீட்டிலிருந்த சுத்தியலால் தினேஷின் இடதுபக்க தலையில் பலமாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே தினேஷ் உயிரிழந்தார்.
பின்னர் சங்கர் கருங்கல்பாளையம் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். சங்கரை கைது செய்த போலீஸார், தினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


