/

ராமசாமி படையாச்சியாருக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் மரியாதை

எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News image
ராமசாமி படையாச்சியாருக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் மரியாதை
Updated On :27 ஜனவரி 2024, 5:21 pm

DIN

கடலூர்: சுதந்திரப் போராட்ட தியாகியும், சமூகநீதிக்காக பாடுபட்டவருமான தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு கடலூர் மஞ்சக்குப்பத்தில் தமிழக அரசால் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது உருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் மற்றும் படையாச்சியாரின் உறவினர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.