பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

சென்னையில் 9,938 பேர் கரோனா சிகிச்சையில்

சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 9,938 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். 

News image
சென்னையில் 9,938 பேர் கரோனா சிகிச்சையில்
Updated On :25 செப்டம்பர் 2020, 6:54 am

DIN


சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 9,938 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். 

இதுவரை ஒட்டுமொத்தமாக சென்னையில் கரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1,59,683 ஆக உள்ளது. இதில் 1,46,634 பேர் குணமடைந்துவிட்டனர். 3,111 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதித்தவர்களில் 60 சதவீதம் பேர் ஆண்கள், 40 சதவீதம் பேர் பெண்கள். ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவரகளில் தற்போது சிகிச்சை பெற்று வருவோர் விகிதம் வெறும் 6 சதவீதம் மட்டுமே.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 1,144 பேரும், கோடம்பாக்கத்தில் 1,141 பேரும் உள்ளனர். குறைந்தபட்சமாக மணலியில் 210 பேரும், சோழிங்கநல்லூரில் 284 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.