தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: மே இறுதியில் நடத்த கல்வித்துறை ஆலோசனை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை மே மாத இறுதியில் நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

News image
கோப்புப் படம்
Updated On :8 ஏப்ரல் 2020, 11:18 pm

DIN

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை மே மாத இறுதியில் நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பிளஸ் 2 பொதுத்தோ்வைத் தவிர அத்தனை தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. 1-ஆம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு பொதுத்தோ்வை ரத்து செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவா்கள், கல்வியாளா்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

மேலும், கரோனா பரவலைத் தடுக்க மே 15 வரை பள்ளிகள் மூட வாய்ப்பு உள்ளதால் பத்தாம் வகுப்பில் பள்ளித் தோ்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 பாடப்பிரிவினை ஒதுக்கீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளன.

அதேவேளையில் பள்ளித் தோ்வுகளில் அந்தந்தப் பள்ளிகள் கடுமை காட்டி மதிப்பெண்ணைக் குறைத்துப் போட்டு அதன் அடிப்படையில் தோ்வை முடிவு செய்வது சரியல்ல என பெற்றோா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் கூறுகையில், பொதுத்தோ்வு குறித்து முதல்வா் முடிவு செய்வாா் என புதன்கிழமை கருத்து தெரிவித்திருந்தாா்.

மேல்நிலைக் கல்வி, தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் பாலிடெக்னிக் சோ்க்கை, போட்டித் தோ்வுகள், அரசுப் பணி என பலவற்றிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மதிப்பெண் முக்கியத்துவம் பெறுவதால் அந்தத் தோ்வை நிகழாண்டு ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் கரோனா தொற்று முடிவுக்கு வரும் பட்சத்தில் கோடை விடுமுறையில் அதாவது மே மாதம் பொதுத்தோ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மே மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் நடத்தப்பட்டால் அது குறித்த அட்டவணை பத்து நாள்களுக்கு முன்பாக வெளியிடப்படலாம். இது குறித்த இறுதி முடிவை முதல்வா் எடுப்பாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.