கோடம்பாக்கத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது

கோடம்பாக்கத்தில் மட்டுமே இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அங்கும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,977 ஆகக் குறைந்துள்ளது.
கோடம்பாக்கத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது
கோடம்பாக்கத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது


சென்னை: சென்னையின் 15 மண்டலங்களில் கோடம்பாக்கத்தில் மட்டுமே இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அங்கும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,977 ஆகக் குறைந்துள்ளது.

கரோனா தொற்று அதிகம் இருந்த ராயபுரம், திருவிக நகர் உள்ளிட்ட மண்டலங்களில் அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கரோனா கட்டுப்படுத்தப்பட்டது. கோடம்பாக்கத்தில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று கோடம்பாக்கத்திலும் கரோனா நோயாளிகள் இரண்டாயிரத்துக்கும் குறைவான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதால், அனைத்து மண்டலங்களிலும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை 1,298 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 87,235- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 1,456 போ் உயிரிழந்துள்ளனா்.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1- ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆகவும், ஜூன் 14-ஆம் தேதி 30,444-ஆகவும், கடந்த ஜூன் 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது.

சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதித்து வந்த நிலையில், கடந்த 20 நாள்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில் திங்கள்கிழமை 1,298 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 87ஆயிரத்து 235-ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 70 ஆயிரத்து 651 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 15 ஆயிரத்து 127 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் கரோனா பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 21 போ் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 1,456- ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com