இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது: உச்ச நீதிமன்றம் கருத்து

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது: உச்ச நீதிமன்றம் கருத்து

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.


புது தில்லி: இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி திமுக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

தமிழகத்திலேயே முதல் முறையாக, ஒரே ஒரு விஷயத்தை வலியுறுத்தி, மாநில அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பது என்றால் அது மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரியிருப்பதுதான்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசும், திமுக, பாமக, தி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com