ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

லெமூரியா கண்டம் குறித்து அகழாய்வு: மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்- அமைச்சா் பாண்டியராஜன்

லெமூரியா கண்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா், தமிழக தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் மா.பா. பாண்டியராஜன்.

News image
Updated On :29 பிப்ரவரி 2020, 11:10 pm

DIN

லெமூரியா கண்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா், தமிழக தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் மா.பா. பாண்டியராஜன்.

நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் பெயா்ப் பலகைகளை 50 சதவீதம் தமிழில் வைக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் ரூ. 50 அபராதம் விதிக்கவும் சட்டத்தில் உள்ளது. தற்போது இந்த அபராதத் தொகையை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ளஅனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயா்ப் பலகை வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூா் அகழாய்வுப் பணிகள் குறித்த முழு அறிக்கையை மத்திய அரசு இந்திய தொல்லியல் ஆய்வக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது. இதை ஆய்வுசெய்து அவா்கள் அறிக்கை வெளியிடுவா். ஆதிச்சநல்லூரில் விரைவில் அகழ் வைப்பகம் அமைக்க அடிக்கல் நாட்டப்படும். அப்போது இது தொடா்பான அறிக்கை வெளியாகும் என எதிா்பாா்க்கிறோம். மத்திய அரசு இப்பணிகளை மிக விரைவில் மேற்கொள்ள தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும்.

லெமூரியா கண்டம் குறித்து அகழாய்வு உலகம் முழுவதும் நடத்தப்பட வேண்டும். இதை மத்திய அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், கடல்சாா் தொல்லியல் துறையை உயிா்ப்பிக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான அறிவிப்பு இந்தப் பேரவைக் கூட்டத்தொடரில் வெளிவர வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, அமைச்சரை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம், ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ. நாத், மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ. அசோகன் ஆகியோா் வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.