மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

1960-70களில் நடந்த புரட்சி மீண்டும் தமிழகத்தில் நடக்க வேண்டும்: ரஜினி ஆவேசம்!

1960-70களில் நடந்த புரட்சியைப் போன்று மீண்டும் ஒரு புரட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். 

News image
Updated On :12 மார்ச் 2020, 3:20 pm

1960-70களில் நடந்த புரட்சியைப் போன்று மீண்டும் ஒரு புரட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி கொள்கைகள் குறித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், 'தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ வேண்டும். மக்களிடம் ஒரு எழுச்சி நிலை உருவாக வேண்டும். இளைஞர்கள் மத்தியில் எழுச்சி உருவானால் பலம், அதிகாரம், ஆள் பலம் எல்லாம் தூள்தூளாகிவிடும்.

தமிழ் மண் புரட்சிக்குப் பெயர்போன மண். காந்தியடிகள் இங்குவந்துதான் புரட்சியை ஏற்படுத்தினார். அதேபோன்று விவேகானந்தர் இங்குவந்துதான் புரட்சியை ஏற்படுத்தினார். அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தில் ஒரு மாநில கட்சி ஆட்சியில் இருந்ததது. 

1960-70களில் நடந்த புரட்சி மீண்டும் நடக்க வேண்டும். மக்கள் அதிசயம், அற்புதத்தை நிகழ்த்த வேண்டும். அவர்கள் நடத்துவார்கள் என்று நம்புகிறேன். மக்கள் அவர்களது வருங்கால தலைமுறையினருக்காக இந்த புரட்சியைநடத்த வேண்டும். இது நடக்காமல் வாக்குகளைப் பிரிப்பதற்கு நான் வர வேண்டுமா? அது எனக்கு தேவையில்லை. புரட்சி நடக்க வேண்டும் என்பதை மூளை முடுக்கெல்லாம் சென்று அனைவரும் சொல்ல வேண்டும்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.