சென்னை: தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டால்தான், மக்களிடம் ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரே ஆண்டு காலம் இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை ரஜினி அறிவிக்கவில்லை. இது ரஜினி ரசிகர்கள் மற்றும் அவரை ஆதரிப்பவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு மாறாக, தமிழகத்தில் பட்டிதொட்டி எல்லாம் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும், தமிழக மக்கள் இடையே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியல் கட்சித் தொடங்குவேன் என்றும், அரசியலில் மாற்றம் ஏற்படாது என்று தெரிந்தால், நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 2021ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் எனும் புரட்சியை தமிழர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவர்கள் தற்போது தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவரின் வாரிசையும், தமிழகத்தை ஆளுபவர்களையும், முழு கஜானாவையும் வைத்திருப்பவர்களையும் நாம் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது ஏற்படாவிட்டால் எப்போதும் ஏற்படாது, நமது ஒரே முழக்கம் அசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என்றும் ரஜினி கூறியுள்ளார். வெறுமனே வாக்குகளைப் பிரிப்பதற்காக மட்டும் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


