அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனா எதிரொலி: குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு

கரோனா எதிரொலியாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :18 மார்ச் 2020, 11:36 am

கரோனா எதிரொலியாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் உருவாகி உலக நாடுகளில் தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. தொடர்ந்து, கரோனா தொற்றைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், '2018-19, 2019-20ல் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு மார்ச் 20 முதல் மார்ச் 31 வரையும், சுருக்கெழுத்தர் பதவிக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரையும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது. 

இந்நிலையில், கரோனா வைரஸை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளதாலும், காரோனாவைத் தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாலும் குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு  ஒத்தி வைக்கப்படுகிறது. இதற்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது. 

இதேபோன்று, உரிமையியல் நீதிபதி பதவிக்கான  முதன்மை எழுத்துத்தேர்வு  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.