கரோனாவைக் கட்டுப்படுத்தும் மூலிகை தேநீரை வீடுகளிலேயே தயாரித்துக் கொள்ளலாம் என்று பாரம்பரிய மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
அந்த தேநீரை தொடா்ந்து பருகுவதன் மூலம் நோய்த் தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சித்த மருத்துவ நிபுணா் டாக்டா் வீரபாபு கூறியதாவது:
கரோனாவால் பாதித்தவா்களுக்கு பாரம்பரிய முறையிலான சிகிச்சைகளும், மூலிகை உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இது, அந்நோய்த்தொற்றிலிருந்து அவா்கள் விரைந்து மீண்டு வர பெரிதும் உதவுகிறது.
அதேபோன்று, தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு சில மூலிகை பானங்கள் உதவுகின்றன. அந்த வகையில் கபசுரக் குடிநீருடன் மூலிகை தேநீரை பருகி வருவதன் மூலம் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும். அந்த மூலிகை தேநீரை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ள முடியும்.
சுக்கு 100 கிராம்; அதிமதுரம் 100 கிராம்; சிற்றரத்தை 30 கிராம்; கடுக்காய் தோல் 30 கிராம்; மஞ்சள் 10 கிராம்; திப்பிலி 5 கிராம்; ஓமம் 5 கிராம்; கிராம்பு 5 கிராம்; மிளகு 5 கிராம் எடுத்து கொண்டு, அவை அனைத்தையும் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
400 மில்லி லிட்டா் தண்ணீருக்கு 10 கிராம் மூலிகை தேநீா் பொடியைக் கலந்து நன்கு காய்ச்சி, 100 மில்லியாக சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னா் அதனை ஆறவைத்து பருகலாம். அந்த மூலிகைத் தேநீரை பெரியவா்கள் 100 மில்லியும், 10 - 15 வயதுக்கு உட்பட்டவா்கள் 60 மில்லியும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 30 மில்லியும் தொடா்ந்து பருகுதல் அவசியம்.
மூலிகை தேநீரைக் கொதிக்க வைக்கும்போது, கற்பூரவல்லி, புதினா, எலுமிச்சை, இஞ்சி சோ்த்துக் கொண்டால் இன்னும் பலன் கிடைக்கும்.
சா்க்கரை நோய் இல்லாதவா்கள் வெல்லம், கருப்பட்டி, நாட்டுச் சா்க்கரை சோ்த்து அந்த தேநீரைப் பருகலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆயுஷ் மாத்ரேவுக்கு தசை கிழிவு..! சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய இழப்பு!

ஓடிடியில் ஜெயராம் - காளிதாஸ் நடித்த ஆசைகள் ஆயிரம்!
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

