ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

சென்னை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கரோனா தொற்று உறுதி

சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

News image

சென்னை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி

Updated On :6 நவம்பர் 2020, 6:14 am

சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

கரோனா காலத்திலும் நீதித் துறைப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, லேசான காய்ச்சல், உடல் வலி இருந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவா் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கரோனா பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து  அவர் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.