திண்டுக்கல்: அரசியலில் தொடர்பான முடிவினை ரஜினிகாந்த் மறு பரிசீலனை செய்ய கோரி திண்டுக்கல் நகரில் அவரது ரசிகர்கள் சனிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனவர்.
2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றம் ஏற்படுத்தப் போவதாகவும், அதற்காக ஜனவரியில் புதிய கட்சித் தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த உடல் நலப் பாதிப்பு காரணமாக திடீரென தனது முடிவினை மாற்றிக் கொண்டார். அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்கள், ரஜினியின் இந்த மாற்றத்தால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைபாடு தொடர்பான முடிவினை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் நகரில் அவரது ரசிகர்கள் சனிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனவர்.
அறவழிப் போராட்டம் என்ற பெயரில், திண்டுக்கல் மணிக்கூண்டும் மற்றும் கல்லறைத்தோட்டம் பகுதிகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது, ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த போராட்டத்தில கலந்து கொண்ட அவரது ரசிகர்கள், ஆன்மீக அரசியலை ரஜினியால் மட்டுமே கொடுக்க முடியும், ரஜினி ஒருவருக்கு மட்டுமே வாக்களிப்போம், பிறருக்கு தங்கள் ஓட்டை செலுத்தப் போவதில்லை என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








