விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

இலவச காலணி வழங்கும் டெண்டரை எதிா்த்த மனு: தமிழ்நாடு பாடநூல் கழகம் பதிலளிக்க உத்தரவு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலணி வழங்குவது தொடா்பான டெண்டரை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு, தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :4 ஜனவரி 2021, 6:44 am IST

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலணி வழங்குவது தொடா்பான டெண்டரை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு, தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், நடப்பு (2020-21) கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலணிகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு பாடநூல் கழகம், கடந்த மாா்ச் மாதம் ஒப்பந்தப் புள்ளி கோரியது.

இந்த ஒப்பந்தப் புள்ளிக்குத் தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், எந்தக் காரணமும் தெரிவிக்காமல் தங்கள் நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்து தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு உத்தரவிட்டாா். மேலும், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதி தள்ளிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.