சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தமிழகத்தில் புதிய பாதிப்பு 838-ஆகக் குறைந்தது

தமிழகத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாக 900-க்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 838 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :5 ஜனவரி 2021, 2:00 am IST

சென்னை: தமிழகத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாக 900-க்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 838 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 1.44 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 8 லட்சத்து 21,550 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 229 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 985 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 97.5 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 1,414 -ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 7,970 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 10 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,166-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.