தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடக்கம்

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளது.

News image

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் விழா குமரன்நாயக்கன் பேட்டையில் துவக்கி வைக்கப்பட்டது.

Updated On :5 ஜனவரி 2021, 11:33 am IST

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு ஈகுவார்பாளையம் ஊராட்சி குமரன்நாயக்கன் பேட்டை கிராமத்தில் முதலாவதாக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமாரால் துவக்கி வைக்கப்பட்டது.

நிகழ்விற்கு ஈகுவார்பாளையம் ஊராட்சி துணை தலைவர் சௌந்தரி மகேஷ், வார்டு உறுப்பினர் முத்துகுமார், கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன், அதிமுக நிர்வாகி நேதாஜி, விற்பனையாளர் சங்கர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் 746 பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசான 2500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுகளை வழங்கிய கும்மிடிப்பூண்டி ஒன்றியகுழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், தமிழக அரசு மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செய்து வரும் நிலையில், தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டதில்லை, அதனால் மக்கள் அதிமுக அரசிற்கு எப்போதும் ஆதரவாய் இருக்க வேண்டும் என்றார்.

அதே போல பெரிய ஓபுளாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் கூட்டுறவு சங்கத்திற்கு உள்பட்ட 17 ரேஷன் கடைகளில் 9,201 பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

பெரியஓபுளாபுரம் தொம்பரை ஆண்டவர் கோவில் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் துவங்கிய இந்த நிகழ்விற்கு கூட்டுறவு சங்க தலைவர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி தலைவர் செவ்வந்தி மனோஜ், எளாவூர் ஊராட்சி தலைவர் வள்ளி முருகேசன், கூட்டுறவு சங்க துணை தலைவர் ஓ.இ.சரவணன், செயலாளர் சந்திரசேகர், இயக்குனர்கள் சக்கரை, எம்.ஜி.எம்.ரவி, பரிமளம், குருமூர்த்தி,  சீனு, நடராஜன், ஏழுமலை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு, மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜெ.சுரேஷ் பங்கேற்று பயனாளிகளுக்கு 2,500 ரூபாய் உள்ளிட்ட தமிழக அரசின் பொங்கல் பரிசை வழங்கினர்.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரம்பாக்கம் ஊராட்சியில் 1732 ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு துவங்கியது.

ஆரம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு அதிமுக மீனவர் அணி மாநில துணை செயலாளர் ஜெ.சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு,அதிமுக நிர்வாகிகள் பிரகாஷ், நிஜாம் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் பங்கேற்று ஆரம்பாக்கத்தில் உள்ள 3 ரேஷன் கடைகளை பயன்படுத்தும் 1732 ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசான 2,500 ரூபாய், சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்டவைகளை வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.